எட்மன்டன் பாடசாலையில் சமூக ஊடகங்கள் மூலம் அச்சுறுத்தல்!

Report

எட்மன்டன் பகுதியிலுள்ள Jasper Place உயர்நிலை பாடசாலையில் சமூக ஊடகங்கள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில், Jasper Place உயர்நிலை பாடசாலை நிர்வாகத்தினால் ஞாயிற்றுக்கிழமை சுமார் 7:30 மணியளவில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்கள் மூலம் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் அறிக்கை மற்றும் அதுதொடர்பான ஒளிப்படங்கள் என்பவற்றை ஆதாரமாக கொண்டு விசாரணைகள், ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பாடசாலை நிர்வாகம், குறித்த பாடசாலை மாணவர்களிடம் திங்கட்கிழமை முதல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் வேறு எந்த தகவலையும் இதுவரை பொலிஸார் வெளியிடவில்லை.

இதேவேளை, அண்மைக்காலமாகவே கனடாவிலுள்ள பிரபல பாடசாலைகளில் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பொன்று குற்றம் சுமத்தியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

281 total views