கனடாவில் இருந்து திருப்பி அனுப்பபட்ட 3-இந்தியர்கள் குற்றச்சாட்டு!

Report

உரிமம் பெறாத போலி குடிவரவு ஆலோசகரால் கனடாவில் இருந்து திருப்பி அனுப்பபட்டதாக, மூன்று இந்தியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்தியர்களான கமால்பிரீட், அம்ரிட் கில் மற்றும் குர்ஜிட் கில் ஆகிய மூன்று பேரும் மாணவர் வீசாவில் கனடாவுக்கு சென்ற நிலையில் அல்கோன்குயின் கல்லூரியில் இணைந்தனர்.

இந்நிலையில்,அவர்கள் மூன்று பேரும் கர்னய்ல் சிங் காதியல் என்ற குடிவரவு ஆலோசகருக்கு 39,000 டொலர்கள் வீதம் செலுத்தியிருந்தனர்.

பாதுகாப்பான தொழில் மற்றும் நிரந்தர வதிவிடத்தை பெறுவதற்காக அவர்கள் இந்த தொகையை குறித்த ஆலோசகருக்கு செலுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

பணம் செலுத்தப்பட்ட பின்னர் மூன்று இந்தியர்களுக்கும் யோக்டனில் உள்ள ஹொவாட் ஜோன்சன் விருந்தகத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளை காதியல் மேற்கொண்டிருந்தார்.

அங்கு தங்குவதற்கு மணித்தியாலத்திற்கு 18.48 டொலர்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

எனினும், அவர்களின் வீசா விண்ணப்பம் மறுக்கப்பட்டதுடன், மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2786 total views