மதுபோதையில் வாகனம் செலுத்திய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது!

Report

மதுபோதையில் வாகனம் செலுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், பீல் பிராந்திய பொலிஸ் திணைக்களத்தில் பணிபுரியும், Burlington ஐ சேர்ந்த 44 வயதுடைய Adrian Woolley என்பவர் ஆவார்.

மற்றொருவர், யோர்க் பிராந்திய பொலிஸ் திணைக்களத்தில் பணிபுரியும் Barrie யை சேர்ந்த 42 வயதுடைய பெண் பொலிஸ் அதிகாரி ஆகியோர்கள்.

இருவருமே, கடமையில் இல்லாத சந்தரப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மாகாண பொலிஸார் குறித்த கைதினை உறுதிப்படுத்தியுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

1843 total views