ஒட்டாவா மருந்து கடையில் திருட்டு - பொலிஸார் தீவிர வலைவீச்சு!

Report

ஒட்டாவா பகுதியில் மருந்து கடை ஒன்றில் திருட்டு சம்பவம் தொடர்புடைய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறித்த திருட்டு, கடந்த பிப்ரவரி 7 ம் தேதி ஒட்டாவா சோமர்செட் செயின்ட் 700 தொகுதியில், உள்ள மருந்து கடை ஒன்றில் இரவு சுமார் 12:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், இந்த திருட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இதையடுத்து அவரின் குறித்த அடையாளங்களாக பொலிஸார் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில், 5'9 அடி உயரத்தில் வெள்ளை நிற தோற்றம் கொண்டிருந்தார்.

அவரது வலது கையில் பச்சை குத்திய தோற்றத்துடன், பச்சை நிற கோட் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் ஒட்டாவா பொலிஸ் அதிகாரி 613-236-1222 இலக்கத்தில் மற்றும் Crime Stoppers at 1-800-222-8477 (TIPS) தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

1024 total views