வின்னிபெக்கில் இளம்பெண் மாயம் - பொது மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்!

Report

வின்னிபெக் பகுதியில்30 வயது நிறைந்த இளம்பெண் ஒருவர் மாயமானது தொடர்பாக பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

குறித்த பெண், கடந்த ஜனவரி மாதத்தில் வின்னிபெக் பகுதியில் போர்ட்லேஸ் பிளேஸ் மால் மற்றும் டவுன்டவுன் பகுதியில் மயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வின்னிபெக் பொலிஸார் குறித்த பெண்ணின் அடையாளங்களாக வெளியிட்டுள்ளதாவது, சுமார் ஐந்து அடி, 122 பவுண்டுகள் எடை மற்றும் நீண்ட சிவப்பு முடி உடையவராக காணப்பட்டார்.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் வின்னிபெக் பொலிஸ் அதிகாரி இலக்கத்தில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

814 total views