சிறுமியை கொலை செய்த தந்தை தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தகவல்!

Report

இந்திய வம்சாவளி சிறுமியை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்தை, தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய வம்சாவளி சிறுமியானா ரியா ராஜ்குமார் (11) தனது தாயுடன் வாழ்ந்து வந்த நிலையில், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தந்தையை சந்திக்கச் கடந்த வியாழக்கிழமை சென்றிருந்தார்.

இந்நிலையில், வெகு நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அவரது தாயார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து, குறித்த தகவலுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார்,சிறுமியை அவரது தந்தையின் வீட்டிலிருந்து சடலமாக கண்டெடுத்துள்ளனர்.

அத்தோடு உயிரிழந்த சிறுமியின் தந்தையைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன்போது அவரது உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் உயிரிழந்த குறித்த சிறுமியின் தந்தை தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.,

10322 total views