கனடாவில் நெடுஞ்சாலைகளை மூடிய மோசமான காலநிலை! பனிப்புயல் எச்சரிக்கை

Report

கனடாவின் மனிடோபா பகுதிகளில் பனி மூட்டம் நெடுஞ்சாலைகளை மூடிய நிலையில் காணப்படுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த, மனிடோபாவின் சில பகுதிகளில் வடக்கு டகோடாவின் பனிப்பொழிவு சுமார் 20 சென்டி மீட்டர் அளவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சில பகுதிகளில் மின்தடை ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகிய பகுதிகளில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதன்படி, வூட்ரிட்ஜ் (Woodridge) மற்றும் செயின்ட் லேப்ரி ஆகிய பகுதிகளில் 20 சென்டி மீட்டர் பனியும், அதே நேரத்தில் (West Hawk) மேற்கு ஹாக், (Piney) பைனே, லா ப்ரோகுகீ (La Broquerie) மற்றும் எமர்ஸன் (Emerson )ஆகிய பகுதிகளில் 10 சென்டி மீட்டர் பனியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, Highway 207 (Deacon's Corner) -லிருந்து நெடுஞ்சாலை 1-ல் உள்ள கிழக்குப் பாதைகள் நெடுஞ்சாலை 12 வரை மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, வாகன சாரதிகள் தங்கள் வாகனங்களை மிகவும் கவனமாக கையாளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

1885 total views