பெண்கள் மீதான வன்முறை செயல்களில் தொடர்புடைய 56-வயது நபர்!

Report

லண்டன் பகுதியில் பெண்கள் மீது வன்முறை செயல்களில் தொடர்புடைய Ronald Kevin 56-வயது நபர் குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு தொடர்பாக வியாழக்கிழமை பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் குற்றசாட்டு காரணமாக லண்டன் பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ளது.

அவரின் அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, 5 மற்றும் 10 அடி உயரமும், 200 பவுண்டுகள் எடையும் உடையவர் ஆவார்.

சாம்பல் நிறமுள்ள முடி, ஒரு முழு சாம்பல் தாடி மற்றும் தலையின் மேற்புறத்தில் மொட்டையடித்துள்ளார். மேலும், அவர் பழுப்பு நிற கண்கள் மற்றும் கண்ணாடிகள் அணிந்திருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் 519-661-5670.என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

1489 total views