கனடாவின் கைதாகும் முன்னர் தனது மகள் கூறிய தகவல் -ஹுவாவி தலைவர் தெரிவிப்பு!

Report

ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி Meng Wanzhou தாம் கைது செய்யப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் வேலையில் இருந்து விலகுவதாகவும் புதிய வேலை ஒன்றை செய்ய விரும்புவதாகவும் தம்மிடம் கூறியதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை, ஹுவாவி நிறுவன தலைவரும் Meng Wanzhou இன் தந்தையுமான Ren Zhengfei சீனத் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று (வியாழக்கிழமை ) இவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Meng Wanzhou என்பவர், நிம்மதியாக கடமையாற்றவில்லை அவரது கைதிற்கு பின்னர் எமது உறவு பலமாகியுள்ளது. இதே வேளை, வாழ்க்கை எவ்வளவு கடிமனாது என்பது அவருக்கு புரிந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி Meng Wanzhou கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை மீறி ஈரானுக்கு தொலைதொடர்புக் கருவிகளை வழங்கியதாக அவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 30 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துமாறு அமெரிக்கா கோரி வரும் அதேவேளை, அவ்வாறு இடம்பெற்றால் கனடா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடுமென சீனா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5302 total views