ஒட்டாவாவில் மர்ம நபரின் கத்தி குத்தில் 30-வயதுடையவர் படுகாயம்!

Report

ஒட்டாவாவில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் 30-வயதுடையவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பாக, ஒட்டாவா பொலிஸார் சசெக்ஸ் மற்றும் நிக்கோலஸுக்கு இடையில் ரைடுவ் ஸ்ட்ரீட், பகுதிக்கு சுமார் 9:30 -மணியளவில் அழைக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் குறித்த நபருக்கு தீவிர சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக வழங்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும், இது தொடர்பாக வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

1086 total views