கனேடிய பிரதமர் மீதான குற்றச்சாட்டு - தீவிர விசாரணைகள் ஆரம்பம்!

Report

எஸ்.என்.சீ லவலின் நிறுவனம் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலான விவகாரத்தில் கனேடிய பிரதமர் தலையீடு செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது பணியாளர்கள் இந்த மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீதான ஊழல் மோசடி குற்றச்சாட்டு குறித்து பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச அமைப்பு குறித்து கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச ஊழல் மோசடிகள் தொடர்பிலான பிரகடனம் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து கண்காணிப்பு செய்யும் பணிகளையும் இந்த அமைப்பு மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

1863 total views