மனிதனின் மூளைச் செயற்பாட்டை கண்காணிக்கும் ‘brain bolt’ தொழில்நுட்பம்

Report

மனிதனின் மூளைச் செயற்பாட்டை கண்காணிக்கும் ‘brain bolt’ என்ற புதிய தொழில் நுட்பமொன்றை வன்கூவர் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த குறித்த, தொழில்நுட்ப கருவியை நோயாளியின் மண்டை ஓட்டில் பொருத்தி மனித மூளையின் செயற்பாட்டை தத்ரூபமாக கண்டறிந்து கொள்வதற்கு முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டு தோறும் சுமார் 160000 கனேடியர்களின் வாகன விபத்துக்கள், விழுதல் போன்ற அனர்த்தங்களினால்மூளைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூளை பாதிப்புக்கு இலக்கான ஒரு மில்லியன் வரையிலான கனேடியர்கள் பேசுவதற்கு, நடப்பதற்கு, பார்ப்பதற்கு முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.

இந்நிலையில், குறித்த கண்டுபிடிப்பு மனிதனின் மூளையில் ஏற்படுகின்ற குறையை தீர்ப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.


1952 total views