உலகை உலுக்கிய நியூசிலாந்து தாக்குதல் - மிசிசாகுகாவில் கண்ணீர் அஞ்சலி!

Report

நியூசிலாந்தில் இருவேறு பள்ளி வாசல்களில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களுக்கு மிசிசாகுகாவில் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுமார் 500ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு விசேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். அத்தோடு,குறித்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பதாகைகளையும் கையில் வைத்திருந்தனர்.

மேலும், அங்கு வந்த மக்கள் குறித்த பயங்கரவாத தாக்குதலுக்கு தமது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தனர்.

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் கடந்த 15ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 42 பேர் காயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், இச்சம்பவத்திற்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ருடோவும் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

399 total views