வின்னிபெக்கில் இந்த ஆண்டின் 9-வது கொடூர கொலை சம்பவம் - பொலிஸார் விசாரணை!

Report

வின்னிபெக் பகுதியில் 2019-ஆம் ஆண்டில் அரங்கேறிய 9-வது கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் Selkirk Ave. மற்றும் Salter St.பகுதியில் சரியாக சனிக்கிழமை காலை 2-40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில், தகவல் தெரிவிக்கப்பட்டு பொலிஸார் அழைக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் ஒருவர் இருந்ததாக தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பகுதியின் சாலைகள் சரியாக மாலை 3:30-மணியளவில் மூடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக தகவல் தெரித்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாரை அனுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

212 total views