தாயால் 8வயது மகனிற்கு நடந்த கொடூரம்

Report

எட்மன்டன் அம்பர் அலர்ட் பகுதியை சேர்ந்த , Noah Ducharme என்ற 8-வயது சிறுவன் அவரது தாயாரால் ( 31) வயது Brianne Hjalte, கடத்தப்பட்டு மயமானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பொலிஸார் தீவிர வலைவீச்சு மேற்கொண்டு வந்த நிலையில், குறித்த சிறுவன் சனிக்கிழமை காலை சரியாக 5:30-மணியளவில் Okotoks, 45கிலோ மீட்டர்தொலைவில் தெற்கு கல்கரி பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறித்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது தயார் (Brianne Hjalte) கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து, Brianne Hjalte, குற்றவியல் கோட் கீழ் ஆள் கடத்தல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், குறித்த 8-வயது சிறுவன் பத்திரமாக அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். இதில், பொது மக்களின் உதவியோடு குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதற்கு பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.

EPS தகவலில் படி, குறித்த 8-வயதுசிறுவன் எட்மன்டனில் 68 வது தெரு மற்றும் 89 வது அவென்யூ பகுதியில் உள்ள வேவர்லே தொடக்க பள்ளியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சரியாக 2:50 மணிக்கு மாயமானார்.

குறித்த Noah Ducharme 8-வயது சிறுவனின் அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, 70 பவுண்டு எடை, மற்றும் குறுகிய பழுப்பு முடி, இருண்ட பச்சை hoodie, ஒளி நிற ஜீன்ஸ் மற்றும் மஞ்சள் மற்றும் கருப்பு Nike அணிந்திருந்தார்.

அவருடைய தாய் ( 31) வயது Brianne Hjalte, அடையாளர்களாக பொலிஸார் கூறும்போது, 50 பவுண்டு எடை, நீளமான முடி, ஐந்து அடி நீளம் மற்றும் இருண்ட தோள்பட்டை உடையவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விசாரணையில், அவர்கள் இவருவரும் கடைசியாக, 2008 ஜீப் ஆல்பர்ட்டா உரிமம் தகடு ZWK 844 உடன் பயணித்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 780-423-4567, மற்றும் #377 என்ற இலக்கு எண்ணிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

9793 total views