வின்ட்சர் பகுதியில் கணிசமான பனி பொழிவு நீடிப்பு - மக்கள் அவதானம்!

Report

கனடாவின் வின்ட்சர் பகுதிகளில் கணிசமான பனி பொழிவு காலநிலை நீடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் நேற்று ( சனிக்கிழமை ) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த, வின்ட்சர் சில பகுதிகளில் Chatham-Kent, Rondeau Park பனிப்பொழிவு சனிக்கிழமை அன்று கூடுதல் அளவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சில பகுதிகளில் மின்தடை ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகிய பகுதிகளில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், சில பகுதிகளில் கணிசமான பனியின் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.

584 total views