இலங்கையில் சந்தேகநபரை தேடும் கனடா பொலிஸார்!..

Report

பாலியல் குற்றச்சாட்டு, பாலியல் செயற்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தியமை தொடர்பாக இலங்கையில் உள்ள சந்தேக நபரை ஒட்டாவா பொலிஸார் தேடி வருவதாக, தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து கிழக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆண்ட்ரூ அன்டன் என்ற நபரை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், குறித்த நபர் கனடாவில் அல்லது இலங்கையில் இருப்பதாக நம்புவதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர், இணையத்தில் அவர் இலங்கையில் இருப்பதை அறிந்து கொண்டதாக தெரிவித்த ஒட்டாவா பொலிஸார் இருப்பினும் அதை விரிவாக விளக்கவில்லை.

இருப்பினும், கனடா பொலிஸாரால் தேடப்பட்டு வரும் குறித்த நபர் தொடர்பாக தகவல்கள் தெரியாது என இலங்கை பொலிஸார் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது பத்திரிக்கையால் எச்சரிக்கப்பட்ட பின்னர் இப்போது இது குறித்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

8846 total views