ஒட்டாவாவின் திறைசேரி தலைவரான ஜோய்ஸ் முர்ரே - பிரதமர் நியமிப்பு!

Report

ஒட்டாவாவின் திறைசேரி தலைவராக ஜோய்ஸ் முர்ரே, என்பவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார்.

இவரது பதவியேற்பு விழா பிரதமர் மற்றும் ஆளுநரின் தலைமையில், ஆளுநரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

திறைசேரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வான்கூவர் நாடாளுமன்ற உறுப்பினரான முர்ரே, முன்னாள் மாகாண அமைச்சரவை அமைச்சராகவும், திறைசேரி தலைவரின் நாடாளுமன்ற செயலாளராகவும் சேவையாற்றியவராவார்.

தனது பதவியேற்பை தொடர்ந்து அங்கு உரையாற்றிய ஜொய்ஸ் முர்ரே, சிறந்த நாடொன்றை கட்டியெழுப்புவதற்கும், கனேடியர்களுக்கு சலுகைகளை ஏற்படுத்தி கொடுக்கவும் பிரதமர் ட்ரூடோவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாக கருத்து தெரிவித்தார்.

ஜேன் ஃபில்போடின் சர்ச்சைக்குரிய இராஜினாமாவை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

432 total views