கத்தி முனையில் கொள்ளையிட்டு சென்ற லண்டன் நபர் கைது!

Report

கத்தி முனையில் கொள்ளையிட்டு சென்ற லண்டன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளார்.

குறித்த கொள்ளை சம்பவம், லண்டன் வெலிங்டன் சாலை தெற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சரியாக 6 -மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த நபர் மாறுவேடத்தை அணிந்து கொண்டு, கத்தி கொண்டு காசாளரை மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கொள்ளையிட்ட பகுதியில் கிடைத்த காணொளி மற்றும் புகைப்படங்களை வைத்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், குறித்த நபர் 30- வயதுடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அவர் வரும் திங்கட்கிழமை அன்று நீதிமன்றத்தின் முன்பு வரவழைக்கப்பட்டார்.

954 total views