கனடாவில் வாகனத்தினுள் வைத்து துப்பாக்கி சூடு - ஆண்கள் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்

Report

வாகனத்தினுள் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டதில் பாரதூரமான காயங்களுக்கு உள்ளான ஆண்கள் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரூக்ஹவன்பிரதேசத்தில், ட்ரேட்யூயி டிரைவ் மற்றும் ஜேன் வீதி பகுதியில், நேற்று அதிகாலை நான்கு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்த வாகனத்தின் மீது சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்குள் இருந்த மூவர் படுகாயமடைந்ததுடன், அருகே இருந்த வீடுகள் மீதும் குண்டுகள் பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தினை அடுத்து அந்தப்பகுதி ஊடான போக்குவரத்துக்களை தடை செய்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எவரும் கைது செய்யப்படதான தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

5014 total views