நோர்த் யோர்க் மண்டபம் ஒன்றில் அதி பயங்கர கத்திக்குத்து -மூவர் படுகாயம்!

Report

நோர்த் யோர்க்கில் உள்ள மண்டபம் ஒன்றில் சிலரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம், டஃப்பரின் வீதிக்கு மேற்கே, ஃபின்ச் அவென்யூவில் அமைந்துள்ள குறித்த அந்த நிகழ்வு மண்டபத்தில் நேற்று அதிகாலை 1.20 அளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தின்போது குறைந்தது 3 பேர் கத்திக் குத்துக்கு இலக்கானதையும், இரண்டு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையும் ரொறன்ரோ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

1725 total views