கனடாவில் 28 வருடங்களுக்கு முன் மாயமான சிறுவன்! இன்றும் நம்பிக்கையில் காத்திருக்கும் குடும்பத்தினர்

Report

கனடாவின் விக்ரோரியா நகரில் 28 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுவனுக்காக, அவரது குடும்பம் இன்னும் காத்திருக்கின்றது.

விக்ரோரிய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மைக்கல் துனஹீ என்ற சிறுவன் காணாமல் போய் நேற்றுடன் 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இதனை,முன்னிட்டு நேற்று நூற்றுக்கணக்கானோர் இணைந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளனர்.

அத்தோடு, குறித்த பகுதியில் நடை பயணமும் மேற்கொண்டனர்.

பெற்றோரை விட்டு சிறிது தூரம் விலகி விளையாடிக்கொண்டிருந்தபோதே மைக்கல் காணாமல் போயுள்ளார்.

இருப்பினும். தனது மகன் உயிருடன் வருவார் என தாம் இன்னும் நம்புவதாக அவரது தாயார் கிறிஸ்டல் துனஹீ தகவல் தெரிவித்துள்ளார்.

கனேடிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த விசாரணையாக, குறித்த சிறுவன் காணாமல் போன விசாரணை காணப்படுவதாக விக்ரோரியா பொலிஸார் தகவல் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், இது குறித்து புதிய தகவல்களை சேகரித்து வருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், தகவல் தெரிந்த பொது மக்கள் 250-995-7444 அல்லது 1-800-222 என்ற கனேடிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

3243 total views