ரொறன்ரோ மக்களுக்கு கடும் எச்சரிக்கை

Report

ரொறன்ரோ பெரும்பாகம் உள்ளிட்ட ஒன்ராறியோவின் பெரும்பாலான தென்பிராந்தியங்களில் 20-40மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம், விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் வாழும் மக்கள் இன்று (திங்கட்கிழமை) கடுமையான மழையினை எதிர்கொள்ள நேரிடும் என்று சுட்டி காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பலத்த இடிமுழக்கமும் காணப்படக்கூடும் எனவும், அதிகளவான மழைப் பொழிவு ரொறன்ரோவின் கிழக்குப் பிராந்தியங்கள் மற்றும் நயாகரா பிராந்தியங்களில் பதிவாகக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் எச்சரிக்கையாக தங்கள் வாகனங்களை கையாளுபடி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

11476 total views