ஒட்டாவாவில் வரலாறு காணாத மழை பொழிவு! வாகன ஓட்டிகள் சிரமம்!

Report

ஒட்டாவாவில் இடம் பெற்ற வரலாறு காணாத மழை பொழிவு காரணமாக மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

குறித்த பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கி திங்கட்கிழமை காலை வரை பரவலான மழை பொழிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா சுற்று சூழல் அமைப்பு தகவலின் படி, ஒட்டாவா விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை 23.8 மி.மீ. ஏப்ரல் 14-மழை பெய்தது தெரிவித்துள்ளது.

அதேபோன்று, செவ்வாய் இரவு மற்றும் திங்கட்கிழமை இரவு சுமார் 47 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது.

OPP அறிக்கையின் படி, மிசிசிப்பி மில்ஸ் நகரில் உள்ள கவுண்டி சாலை 29 ம் தேதி கடுமையான மழை பெய்தது. டெய் பள்ளத்தாக்கில் உள்ள நெடுஞ்சாலை 7 பகுதி புயல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, வாகன சாரதிகள் மிகவும் கவனமாக தங்களது வாகனங்களை கையாளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடி பெயருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

440 total views