தனது காதலியுடன் சுற்றுலா சென்ற கனேடியருக்கு வெளிநாட்டில் நிகழ்ந்த சோகம்!

Report

தாய்லாந்துக்கு தனது காதலியுடன் சுற்றுலா சென்ற கனடியர் ஒருவர் சாகச விளையாட்டில் ஈடுபட்ட போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கனடாவை சேர்ந்த 25 வயதான இளைஞர் தனது காதலி மற்றும் நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு இரண்டு மலைகளுக்கிடையில் கட்டப்பட்ட கம்பியில் தொங்கிக் கொண்டே செல்லும் சாகச விளையாட்டில் இளைஞர் ஈடுபட்டுள்ளார்.

அப்போது இளைஞரின் உடலில் கட்டப்பட்டிருந்த கயிறு திடீரென அறுந்து விழுந்ததில் 100 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.

இதில், கீழே விழுந்த இடத்தில் முழுவதும் கற்கள் இருந்த நிலையில் அதில் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரின் உடலை நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஊழியர்கள் கைப்பற்றினார்கள். இது குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

பொலிசார் கூறுகையில், குறித்த சாகச விளையாட்டு நிறுவனம் இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளது.

இதற்கான நஷ்ட ஈட்டை உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு கொடுத்துள்ளது. மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.

6859 total views