லிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் அனுமதி!

Report

கனடாவில் புதிய திருப்பமாக, லிட்டில் பே தீவுகளில் குடியேறுவதற்கு லிபரல் அரசாங்கம் உத்தியோகபூர்வ அனுமதி அளித்துள்ளது.

இதற்காக வேறு மாகணங்களில் இருந்து 54 குடியிருப்பாளர்களை நகர்த்துவதற்காக லிபரல் அரசாங்கம் 10 மில்லியன் டொலர்களை செலவிட ஒப்புக்கொண்டுள்ளது.

தற்போது, குடியிருப்பாளர்களுக்கான கடிதங்களை அனுப்பவுள்ளதாகவும், அவர்களில் 90 சதவீதமானவர்கள் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டால், மீள்குடியேற்றம் தொடரும் என நகராட்சி விவகார மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரஹாம் லெட்டோ தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் படி, ஒருவருக்கு 250,000 டொலர்களும், குடும்பங்களுக்கு 270,000 டொலர்களும் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

1640 total views