கனடாவில் அரங்கேறிய சம்பவத்தில் உயிருக்கு போராடும் தாய் மற்றும் மகன் - தந்தை கைது!

Report

கனடாவில், வாகனத்தை இயக்கி சென்ற தந்தை வேக கட்டுப்பாட்டை இழந்ததால், தாய் மற்றும் அவரது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.

இதில், 36 வயது பெண் மற்றும் அவரது 6-வயது மகன் ஆகியோர் நேற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்புடைய அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

பீல் பிராந்திய பொலிஸ் குறித்த நபர், மீது அலட்சியத்தன்மை மற்றும் உயிருக்கு ஆபத்தான பயணம் ஆகிய இரண்டு குற்றசாட்டுகளை பதிவு செய்தனர்.

குறித்த தாக்குதல், பிரம்டன் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற நிலையில், Bancroft Wright பொலிஸ் நிலையத்திற்கு காலை 8:37 -மணியளவில் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

9915 total views