விமான விபத்தில் உயிரிழந்த கனேடிய பெண் தொடர்பாக நண்பர்கள் உருக்கம்!

Report

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் 2 சுற்றுலா விமானங்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த கனேடிய பெண்ணை நண்பர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த 37 வயதுடைய எல்சா வில்க் உயிரிழந்தார்.

மேலும், அமெரிக்காவை சேர்ந்த 39 வயதுடைய ரியான் வில்க் என்ற அவருடைய கணவர் மற்றும் கணவரின் சகோதரர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து, சம்பவத்தை அடுத்து அந்நாட்டு ஊடகம் குறித்த பெண்ணின் நண்பர்களிடம் அவர் தொடர்பாக வினவியது.

இதன்போது, அவரது நல்லெண்ணம் மற்றும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை குறித்து நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், குறித்த தம்பதிகள் கடந்த வருடம் ரியானை திருமணம் செய்து கொண்டதாகவும் பின்னர் சோல்ட் லேக் நகருக்கு செல்ல முடிவு செய்திருந்ததாக பெண்ணின் 6 வருட நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த பெண் எப்போதும் நல்ல மனிதர் எனவும் அவர் சிறந்த தடகள வீராங்கனை என்றும் அவரது நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ஒரு விமானத்தில் இரண்டு விமானிகள் உட்பட 16 பேர் இருந்ததாகவும் அதில் 14 அமெரிக்கர்கள், ஒரு கனேடியரும் மற்றும் ஒரு அவுஸ்ரேலியரும் அடங்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

2897 total views