வன்முறை புகாரளிக்க வந்த இளம் பெண்ணை மோசமாக விசாரித்த கனடா பொலிசார்!

Report

தன்னை ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகாரளிக்க வந்த இளம் பெண்ணிடம் மோசமான கேள்விகளை கேட்ட பொலிசாருக்கு கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட காணொளி ஒன்றில் பாலியல் புகாரளிக்க வந்த பெண்ணிடம் அந்த பொலிஸ் அதிகாரி மோசமான கேள்விகளை கேட்கும் காட்சிகள் வெளியாகின.

அந்த பெண்ணின் முகத்தையோ, அந்த அதிகாரியின் முகத்தையோ அந்த தொலைக்காட்சி வெளியிடவில்லை. இந்த சம்பவம், பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற்றது. அந்த இளம்பெண் கனடாவின் பூர்வக்குடியினப் பெண் ஆவார்.

அந்த இளம்பெண்ணை விசாரித்த அதிகாரி, உங்களை பாலியல் வன்புணர்வு செய்யும்போது, அது உங்களை மகிழ்ச்சிப்படுத்தியதா என்பது போன்ற கேள்விகளை கேட்டார்.

இந்த காணொளிக்கு, நேற்று கனடா எதிர்க்கட்சி தலைவர் உட்பட கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

அந்த இளம்பெண்ணை விசாரித்த அதிகாரி கேள்வி கேட்ட விதம் முற்றிலும் தவறானது, பழமையான முறை மற்றும் காயப்படுத்தும் வகையிலானது என்று ஃபெடரல் பொது பாதுகாப்பு அமைச்சர் Ralph Goodale நேற்று கூறினார்.

பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட ஒருவர் கூட தங்கள் வழக்கு சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படாது என்றோ, அவர்கள் விசாரணையின் போது மீண்டும் தாக்குதலுக்குள்ளாவோம் என்றோ பயப்படக் கூடாது என்று கூறினார் அவர்.

அந்த காணொளி, தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றும் கோரமாக இருந்தது என்றும் கூறிய எதிர்க்கட்சி தலைவர் Scheer,அந்த பெண்ணை விசாரித்த விதம் அதிர்ச்சியூட்டுவதாகவும், உணர்ச்சியற்ற ஜடத்திடம் விசாரிப்பது போலவும் இருந்தது என்றார்.

1770 total views