தந்தையின் கவனயீனம் : கார் மோதி தாய் மற்றும் 7 வயது மகன் படுகாயம்!

Report

பிரம்டன் மவுண்ட் பிளசன்ற் பகுதியில் தந்தை செலுத்திய பிக்கப் ரக வாகனத்தினால் மோதுண்ட தாயும், ஏழு வயது மகனும் உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மவுண்ட் பிளசன்ற் இல் அமைந்துள்ள GO ரயில் நிலையத்திற்கு அருகே, கொன்டக்ரர் லேன் மற்றும் போர்ட்ஸ்டவுன் பகுதியில், நேற்று முன்தினம் காலை 8.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

இதனை பீல் பிராந்திய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதுடன் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அந்த வீட்டுக்கான பாதையில் நின்றுகொண்டிருந்த போது தந்தை வாகனத்தை பின்னோக்கி நகர்த்தியதால் தாயும் மகனும் வாகனத்தினால் மோதுண்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக குறித்த 41 வயதான ஜொனாதன் லியோன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

1465 total views