கனடாவில் 10-வயது சிறுவன் மீது கத்தியால் குத்தி தாக்குதல்

Report

கனடாவில், நேற்று மாலை 10-வயது சிறுவன் ஒருவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்ற நபரை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

குறித்த சிறுவன், ஜேன் மற்றும் சல்கஃபார்ம் பகுதியில் தனது வீட்டிற்கு வெளியே வரும் போது மர்ம நபர் ஒருவரால் குத்தப்பட்டார்.

இதில், குறித்த சிறுவன் அதிக ரத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ரத்த காயங்களுடன் இருந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில், குறித்த நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், இது தொடர்பில் வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும், குறித்த நபர் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

3713 total views