கனடாவில் புகலிட குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Report

கனடாவில் புகலிடம் கோரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய புள்ளிவிபர திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த இரண்டு ஆண்டுகளில் கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளமை தெரிய வந்துள்ளது.

கணக்கெடுப்பின் படி, கடந்த 2015ஆம் ஆண்டு 16,058 பேரும், 2016ல் 50,389 பேரும், 2018ல் 55,000 பேரும் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

2017ம் ஆண்டு விண்ணப்பித்த 50,389 பேரில், 12,234 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, 10,930 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

27,225 பேரின் விண்ணப்பங்களின் முடிவு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டிரம்ப், அமெரிக்கா குடியேற்ற கொள்கையில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றார்.

இதன் காரணமாகவே, கனடாவில் புகலிடம் கோரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

9046 total views