ஹோண்டுராஸ் விமானம் விபத்தில் கனேடிய விமானி பலி! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்

Report

ஹோண்டுராஸ் நாட்டில் குட்டி விமானத்தில் விபத்து ஏற்பட்டதில், கனேடிய விமானி உட்பட சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பரிதாபமாக பலியாயினர்.

இது தொடர்பில் உயிரிழந்த பேட்ரிக் ஃபோர்செத் (Patrick Forseth) கனேடிய நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அமெரிக்க நாடு ஹோண்டுராஸ், இங்குள்ள சுற்றுலாத் தலமான ரோட்டான் தீவில் இருந்து குட்டி விமானம் ஒன்று நேற்று முன்தினம் அங்குள்ள ட்ருஜில்லோ நகருக்கு புறப்பட்டது.

இதில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சில வினாடிகளில் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் அந்த விமானத்தில் இருந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 5 பேரும், கனேடிய விமானியும் பலியாகி விட்டனர்.

இதையடுத்து, குறித்த தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

பலியான சுற்றுலாப்பயணிகளில் 4 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என ராணுவ செய்தி தொடர்பாளர் ஜோஸ் டொமிங்கோ தெரிவித்தார்.

இதில், 5-வது சுற்றுலாப்பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது இன்னும் தெரிய வரவில்லை.இந்த விமான விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

4946 total views