கனடாவின் வேகமாக வளர்ந்து வரும் தொழில்

Report

தூய வலு எனப்படும் இயற்கை முறையிலான சக்தி உற்பத்தித்துறை கனடாவின் பொருளாதாரத்தினை விடவும் வேகமாக வளர்ந்து வரும் துறையாக உருமாறியுள்ளது.

இந்நிலையில், அத்துறை அதிக தொழில் வாய்ப்புக்கு மிகவும் அறியப்படும் துறைகளில் ஒன்றாக கருதப்படுவதாகவும் அண்மைய ஆய்வு அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

பிரிட்டிஸ் கொலம்பியா சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகத்தின் சிந்தனையாளர் குழாம், இந்த ஆய்வினை மேற்கொண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

பருவநிலை மாற்ற விவகாரத்தினையும் பொருளாதாரத்தினையும் மிகவும் அணுக்கமாக நோக்க வேண்டியமை இன்றியமையாததாக உள்ள போதிலும், பெருமளவானோர் இதனை அதிகம் அறிந்திருப்பதில்லை என்பதை அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து, ஏனைய பல நாடுகளும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், கனடாவில் அவ்வாறு இல்லை எனவும், ஆனால் கனடாவில் 2017ஆம் ஆண்டில் மட்டும் குறித்த இந்த தூய சக்திவளத்துறையில் சுமார் 3-இலட்சம் பேர் வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அந்த இந்த ஆய்வுக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டில் கனடாவின் மொத்த தேசிய உற்பத்தியில் இந்த தூய சக்திவளத்துறை சுமார் 3 சதவீத பங்களிப்பினை, அதாவது 57 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டிக் கொடுத்துள்ளதாகவும், இது ஆண்டுக்கு 5 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3115 total views