கனடாவில் பள்ளி வாகனத்திற்கு நேர்ந்த கதி! 11 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

Report

கனடாவில் பள்ளி வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில், 11 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி ஆல்பர்ட்டா உடல்நலம் சேவைகள் கூறும்போது, காயமடைந்தவர்களில் இரண்டு பேர் எலும்புகள் உடைந்த நிலையில் உள்ளனர். மற்ற குழைந்தைகள் லேசான காயம் பெற்றிருந்தனர்.

குறித்த விபத்து, நேற்று காலை 8-மணியவில் வடக்கு சஸ்காட்செவான் ஆற்றின் மீது க்வெஸ்வெல் பாலம் அருகே வைட்முட் டிரைவில் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

பள்ளி வாகனம் தனித்து விரைந்து வந்து தரையின் மீது மோதிக்கொண்டதில் சம்பவித்துள்ளது. இதில், பள்ளி வாகனத்தில் இருந்த மற்ற 12-குழந்தைகளும் பாதுகாப்பாக முறையில் மீட்கப்பட்டனர். மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

13421 total views