கனடாவில் மாணவர்களை அச்சுறுத்தும் விதமான வாகனம் ஒட்டிய ஓட்டுநர் கைது!

Report

கனடாவில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமான தாறுமாறாக வாகனம் ஒட்டிய பள்ளி வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

மேற்கு எட்மன்டன் பகுதியை சேர்ந்த பள்ளி வாகன ஓட்டுநர் இவ்வாறான ஆபத்தான பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணத்தின் போது பள்ளி பேருந்தில் சுமார் 20-மாணவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,அவர்கள் குறித்த பயணத்தின் போது காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர்.

இது தொடர்ப்பில், 39-வயது பெண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை பிரிவில் உள்ளார் .

இவ்வாறான குறித்த பயணம் ஹெமிங்வே சாலை மற்றும் 57 அவென்யூவில் சரியாக 3:41 மணியளவில் நிகழ்த்தப்பட்டது.

1221 total views