அமெரிக்க மொடல் அழகியின் வீட்டுக்குள் நுழைந்த கனேடியருக்கு கிடைத்த கடும் தண்டனை!

Report

அமெரிக்க மொடல் அழகி ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த கனேடியர் ஒருவரை அமெரிக்க அரசு அதிரடியாக நாடு கடத்தியுள்ளது.

பிரபல மொடலான கெண்டல் ஜென்னரின் வீட்டுக்குள் இரண்டு முறை நுழைந்த John Ford என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஒண்டாரியோவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

ஒரு முறை Ford கலிபோர்னியாவிலுள்ள ஜென்னரின் வீட்டிலுள்ள நீச்சல் குளத்தில் மறைந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதில்,Fordஐக் கைது செய்த பொலிசார் அவரை சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு கோரி ஜென்னர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.

இரண்டாவது முறை மீண்டும் Ford ஜென்னரின் வீட்டுக்குள் நுழைந்த நிலையில் அவரை கைது செய்த பொலிசார், அவர் அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருப்பதை அறிந்தனர்.

Fordஐ நீதிமன்றத்தில் பொலிசார் ஒப்படைக்க, நீதிபதி அவரை நாடு கடத்த உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து கடந்த வெள்ளியன்று Ford நாடு கடத்தப்பட்டார்.

அமெரிக்க பொலிசார் Houston சர்வதேச விமான நிலையத்தில் அவரை விமானத்தில் ஏற்றி, நேரடியாக ஒண்டாரியோவுக்கு அனுப்பி வைத்தனர்.

3313 total views