பல்வேறு ஊகங்களுடன் கனடா வாழ் தமிழ் மக்கள்!!

Report

IBC தமிழா Toronto 2019 என்ற பெயரில் எதிர்வரும் ஜுன் மாதம் 29ம் திகதி டொரன்டோ scotiabank arenaவில் 15000 இற்கும் அதிகமான பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கின்ற அந்த பிரம்மாண்ட நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து 1000 பிரபல்யமான தமிழ் கலைஞர்கள் கலந்துகொள்ள இருப்பது யாவரும் அறிந்ததே.

IBC தமிழா Toronto 2019 பிரமாண்ட மேடையில் தமது திறமைகளை வெளிக்காண்பித்து பார்வையாளர்களை மகிழ்விக்க இருக்கும் ஒரு சில கலைஞர்கள் பற்றிய விபரங்கள் வெளிவந்துள்ள நிலையில், இன்னும் எந்தெந்த கலைஞர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கின்றார்கள் என்ற விபரங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினரால் இதுவரை வெளியிடப்படாமலேயே இருக்கின்றது.

அந்த மேடையில் பார்வையாளர்களை மகிழ்விக்க இன்னும் யார் யாரெல்லாம் வர இருக்கின்றார்கள் என்ற கேள்விகள்; பல்வேறு ஊகங்களாக கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் வலம் வர ஆரம்பித்துள்ளன.

இதேவேளையில், IBC தமிழா Toronto 2019 என்ற வரலாற்று நிகழ்வில் தாமும் ஒரு அங்கமாகிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நுழைவுச் சீட்டுக்களை தற்பொழுது கொள்வனவு செய்துவருகின்றார்கள்.

2689 total views