கனேடிய இளம் பெண்களின் உயிரிழப்புக்கு காரணாமான வாலிபருக்கு இரண்டு ஆண்டு சிறை!

Report

அதிவேக வாகன ஓட்டுதலின் காரணமாக இரண்டு கனேடிய பெண்கள் உயிர் இழந்த நிலையில், இது தொடர்பில் கார் ஓட்டுனருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில், 20-வயது Chris Galletta என்பவர் காரை இயக்கியுள்ளார். இதில், காரினுள் 18- வயது ( Michaela Martel) மற்றும் 17-வயது (Sommer Foley) என்ற இரண்டு பெண்கள் இருந்துள்ளனர்.

குறித்த சம்பவம், கடந்த 2017-ம் ஆண்டு தந்தையர் தினம் அன்று வாகன ஓட்டுதலின் போது ஓட்டுநர் தனது கட்டுபாட்டினை இழந்ததால் சம்பவித்துள்ளது.

இதில், குறித்த நபர் மணிக்கு சுமார் 180 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதால், தனது கட்டுப்பாட்டினை இழந்து அருகில் உள்ள மரத்தில் மோதியது.

இதையடுத்து, சம்பவ இடத்திலேயே குறித்த இரண்டு பெண்களும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்நிலையில், இது தொடர்பில் வழக்கு விசாரணையில் குறித்தல் நபருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

3833 total views