கனேடிய துப்பாக்கி சூடு தொடர்புடைய 20-வயது வாலிபர் குறித்து பொது மக்களிடம் உதவி!

Report

கனேடிய துப்பாக்கி சூட்டில் சிக்கிய பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

குறித்த துப்பாக்கி சூடு தொடர்பில், டொரோண்டோ பகுதி பொலிஸார் நள்ளிரவு வேளையில் கிரானாரைன் டிரைவ் மற்றும் அர்டெலா அவென்யூ, பகுதிக்கு அழைக்கப்பட்டனர்.

இதில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த போது பெண் ஒருவர் அதிக காயங்களுடன் இருந்துள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில், 20வயது வாலிபர் ஒருவரை பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவர் சாம்பல் நிற டிராக் கடைசியாக அணிந்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பில் பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ள நிலையில், தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

1099 total views