கடத்தப்பட்ட இரண்டு கனேடிய இளம் பெண்கள் பத்திரமான மீட்பு! மூன்று நைஜீரியர்கள் உட்பட 8-பேர் கைது!

Report

கடந்த ஜூன் 4 அன்று கடத்தப்பட்ட இரண்டு கனேடிய இளம் பெண்களை பொலிஸார் பத்திரமாக மீட்டு கொண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பில், குறித்த குற்றச்சாட்டில் ஐந்து கனேடியர்கள் மற்றும் மூன்று நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 19-மற்றும் 20-வயது நிறைந்த இரண்டு கனேடிய இளம் பெண்களும் Ghana ராயல் கால்ப் கிளப்பில் வைத்து கடத்தப்பட்டனர்.

இது தொடர்பில் குறித்த பெண்களின் புகைப்படம் பெய்லி சிட்டி( Bailey Chitty) , லாரன் டிக்கி Lauren Tilley வெளியிட்ட பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரினர்.

இந்நிலையில், குறித்த இளம்பெண்கள் கடந்த ஜூன் 12-அன்று பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், இது தொடர்பில் 8-பேரை கைது செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

1708 total views