கனடாவில் வின்னிபெக் பகுதியில் கடந்த ஆறு மாதத்தில் 22-கொலை சம்பவம் பதிவு! அச்சத்தில் மக்கள்

Report

கனடாவில் வின்னிபெக் பகுதியில் இந்த ஆண்டில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 22-கொலை சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வின்னிபெக்கின் காவல்துறைத் தலைவர் தகவலின் படி , இது கடந்த ஆண்டை காட்டிலும் இரண்டு மடங்கு உயர்வாக பார்க்கப்படுகிறது. கனடாவில் வின்னிபெக் பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு 22-கொலை சம்பவம் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இதன் வளர்ச்சி இந்த ஆண்டில் இன்னும் அதிகரிக்க கூடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இதுவே கடந்த 2011-ஆம் ஆண்டில் 41-கொலை சம்பவ பதிவு செய்யப்பட்டு, படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது அதிகரித்து காணப்படுவது பொது மக்களிடையே அச்சம் தோன்றுகிறது.

1375 total views