சர்ச்சைக்குரிய பைப்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல்!

Report

சர்ச்சைக்குரிய ட்ரான்ஸ் மவுண்டைன் பைப்லைன் (குழாய்பதிப்பு) திட்ட விரிவாக்கத்துக்கு கனடா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த திட்டம் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீதிமன்றம் ஒன்று கடந்த வருடம் தெரிவித்திருந்தது.

இது தற்போது, கனடாவின் அதிபராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தேர்தல் சமயத்தில் பெரும் சவாலாக இருக்கும். இந்த திட்டத்துக்கு சூழலியளாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த திட்டத்துக்கான செவ்வாயன்று, மறு ஒப்புதலை வழங்கிய ட்ரூடோ இந்த திட்டத்தின் மூலம் வரும் வருவாய் சூழலியல் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு உற்பத்தியில் உலகளவில் கனடா ஐந்தாம் இடம் வகிக்கிறது.

இந்த கச்சா எண்ணெய் பைப்லைன் திட்டமானது, எட்மாண்டன், அல்பெர்டா ஆகிய பகுதிகளிலிருந்து புர்னாபி, பிரிட்டிஷ் கொலம்பியா என பழங்குடி மக்கள் இருக்கும் பகுதி வரை கச்சா எண்ணெயை கொண்டு செல்லும்.

தற்போது 1,150 கிமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த பைப் லைன் இரு மடங்கு தூரத்துக்கு விரிவாக்கம் செய்யப்படும். அதன் கொள் அளவு நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேரல்களில் இருந்து 890,000 ஆக உயரும்.

பசிஃபிக் கடற்கரைகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு மாதத்துக்கு ஐந்து டாங்கர்கள் வந்து போன வீதியில் இனி 34 டாங்கர்கள் வந்து போகும்.

இந்த திட்டத்துக்கு எதிராக போராடி வந்த கனடாவின் மேற்கு பகுதியில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த பழங்குடி மக்கள் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பைப் லைன் விரிவாக்க திட்டம் கனடாவில் இரு பிரிவினர்களை உருவாக்கியது. ஒரு தரப்பு இந்த திட்டத்தால் எண்ணெய் கசிவு போன்ற ஆபத்துக்கள் ஏற்பட்டு என்றும், பருவநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினர்.

மறுதரப்பு இது கனடாவின் ஆற்றல் துறை ஸ்திரத்தன்மையற்ற நிலையில் உள்ளதால் கனடாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகைக்கும் என்று கருதிகிறார்கள்.

அமெரிக்க சந்தையை கனடா நம்பியிருப்பது இந்த திட்டத்தால் குறையும் என ஜஸ்ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடா மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்படாது என்று தெரிவித்து தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் அவரின் கட்சிக்கும் அடுத்த தேர்தலில் இந்த திட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

2301 total views