கனடாவில் வின்ட்சர் பகுதி மக்களை அச்சறுத்திய கடும் தீ விபத்து

Report

கனடாவில் வின்ட்சர் பகுதியில், இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி $500,000 மதிப்புள்ள பெரும் அளவிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து, வின்ட்சர் ஹோவர்ட் அவென்யூ பகுதியில் காலை வேளையில் சரியாக 6-மணியவில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இதில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி கட்டுக்கடங்கா தீயினை அணைத்தனர்.

இதில், பெரும்பாலான $500,000 மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது. இருப்பினும், குறித்த தீ விபத்து தொடர்பில் எவருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை.

இதையடுத்து, குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

1796 total views