கனடாவில் நேற்றிரவு நடைபெற்ற கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்!

Report

கனடாவின், கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்றிரவு இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் 36 வயதான ஒருவரே காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கத்திக்குத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

511 total views