கனடாவில் விமான விபத்தில் மாயமான 4 பேரை தேடும் பணி தீவிரம்! 3 பேர் உயிரிழப்பு

Report

வடகிழக்கு கனடாவின் புறநகர் பகுதியான லாப்ரடோர் (Labrador) பிரதேசத்தில் உள்ள ஏரிக்குள் கடல் விமானம் ஒன்று நிலைதடுமாறி வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

கடந்த ஜூலை 16-அன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்திருந்ததுடன் மேலும் நான்கு பேர் காணமல் போயுள்ளனர்.

கியூபெக்கில் உள்ள எயார் சகுய்னேய் (Air Saguenay) நிறுவனத்தால் இயக்கப்படும் DHC-2 பெவர் விமானத்தில் 7 பேர் சென்றிருந்தனர்.

ஒரு விமானி, இரண்டு வழிகாட்டிகள் மற்றும் நான்கு பயணிகள் அதில் பயணித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், விமான விபத்தில் சிக்கி காணமல் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

377 total views