கனேடிய பெண்ணின் அந்தரங்கத்தை ரசித்த முன்னாள் கணவர்! தடுப்பதற்கு பெண் எடுத்து துணிச்சலான செயல்

Report

தனது முன்னாள் மனைவியின் வீட்டில் திருட்டுத்தனமாக நுழைந்த நபர், அவர் வீட்டின் படுக்கையறையிலும் ஹாலிலும் கெமராக்களை மறைத்து வைத்தார்.

கனடாவின் வின்னிபெக்கை சேர்ந்தவரான சாரா உஸ்மானின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் உலா வருவதாக அவரது கணவரின் உறவினர்களே சாராவுக்கு தெரியப்படுத்தினர்.

இதையடுத்து, அவர் தனது வீட்டில் கெமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்.

அதைத் தொடர்ந்து, தனது முன்னாள் கணவர் மீது, மறைந்திருந்து நிர்வாணத்தை ரசித்தல் மற்றும் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளைக் கூற, பொலிசார் அவரை கைது செய்தார்கள்.

ஆனால், இந்த புகார்கள் நிரூபிக்கப்படாததால், வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த குற்றத்திற்காக மட்டும் அவருக்கு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கும் போது தனது முகத்தை வெளியில் காட்டாமலே பேட்டியளித்து வந்த சாரா, பின்னர் துணிச்சலாக ஒரு முடிவெடுத்தார்.

அது, அவரது முகத்தை பத்திரிகைகளில் வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது தான்.

அதாவது, இவ்வளவு நாள் அவமானத்தால் மறைந்திருந்த சாரா, இப்போது துணிந்து வெளி வந்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் குறித்து பேச வந்திருக்கிறார்.

அதோடு நிற்காமல், அவரது முன் மாதிரியைப் பின்பற்றி அவருடன் இணைந்து கொண்டுள்ள பலர், அவரைப் போல பாதிக்கப்பட்டவர்கள் வெட்கத்தை எதிர் கொள்வதற்கு ஆலோசனை கூறும் அமைப்பு ஒன்றையும் உருவாக்கியுள்ளார்கள்.

இது ஒரு நல்ல முன் மாதிரி என்று கூறும் வழக்கறிஞர் ஒருவர், இந்த குழுவினர் பகிர்ந்து கொள்ளும் விடயங்கள் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்கள் வழக்கில் தீர்ப்பு கூறக் கூட உதவலாம் என்கிறார்.

17486 total views