எட்மன்டன், கத்தோலிக்க பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னிடம் இசை பயில வரும் மூன்று வயது குழந்தையை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பான தகவலை, பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தெரியப்படுத்தியது. இதையடுத்து, குறித்த ஆசிரியர் மீது கடந்த மே 13, 2019 அன்று அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்பட்டது.
இதில், அவர் மீது பாலியல் வன்கொடுமை, 16 வயதிற்குட்பட்ட குழந்தையின் பாலியல் ஆலோசனை, மற்றும் ஒரு குழந்தையுடன் பாலியல் தொடர்பு வைத்திருத்தல் ஆகிய குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும், இது குறித்த பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.