கனடாவில் வீதியில் நிர்வாணமாக உலாவிய குழந்தை! பொது மக்களுக்கு அறிவுறுத்திய பொலிஸார்

Report

கனடாவில் நள்ளிரவில் தெருக்களில் இரண்டு குழந்தைகள் அலைந்து திரிந்தனர். அவற்றுள் ஒன்று நிர்வாணமாக இருந்துள்ளது.

குறித்த சம்பவம், மத்திய ஓஷாவா பகுதியில் நேற்று நள்ளிவு 2:45 மணியவில் சம்பவித்துள்ளது.

இதையடுத்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி கனடாவின் கிங் ஸ்ட்ரீட் வெஸ்ட், பார்க் ரோடு தெற்கே நிர்வாணமாக இருந்த 5-வயது ஆண் குழந்தையை கண்டனர்.

இதனை தொடர்ந்து, மற்றுமொரு 3-வயது ஆண் குழந்தையை பார்க் சாலைக்கு அருகிலுள்ள சாகுனே அவென்யூவில் கிழக்கு நோக்கி கண்டனர்.

இந்நிலையில், குறித்த இரண்டு குழந்தைகளும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்ட்டனர்.

மேலும், இது குறித்து பெற்றோரிடம் தங்கள் குழந்தைகளை பத்திரமாக பேணி காக்கும் படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

1298 total views