முன்னாள் மனைவியை அவமானப்படுத்த கணவன் செய்த அசிங்கமான செயல்! காட்டிக்கொடுத்த பெண்

Report

விவாகரத்து செய்த முன்னாள் மனைவியை அவமானப்படுத்துவதற்காக அவளது படுக்கை அறையில் ரகசிய கமராவை வைத்து நிர்வாண புகைப்படங்களை எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு அவமானப்படுத்தியுள்ளான். இதனை வெளிப்படுத்திய பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது முன்னாள் கணவருக்கு சிறை தண்டனை பெற்றுக்கொடுத்துள்ளார்.

தனது முகத்தை ஊடகங்களின் முன்பு வெளிப்படுத்தியதோடு தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைந்து வெட்கமற்றவர்களின் வட்டம் என பொருள்படும் Shameless Circleஐ தொடங்கியுள்ளார்.

கனடா நாட்டில் வின்னிபெக் பகுதியைச் சேர்ந்தவர் சாரா உஸ்மான். இவரது நிர்வாண புகைப்படங்கள், அந்தரங்க புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வலம் வந்தது. அதைப்பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் அனைவரும் சாராவை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பெண் தனது முன்னாள் கணவன் மீது பொலிஸில் புகார் அளித்துள்ளார். சந்தேகம், நிர்வாணப்படுத்தி ரசித்தல், அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுதல் என கொடுமைக்கார முன்னாள் கணவனைப் பற்றி பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

பொலிஸ் நடத்திய விசாரணையில் சாராவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த முன்னாள் கணவன், படுக்கை அறை மற்றும், ஹாலில் ரகசிய கமராவை மறைத்து வைத்து புகைப்படங்களை எடுத்து ரசித்ததோடு சாராவை அவமானப்படுத்தும் நோக்கில் அதனை இணையத்தில் வெளியிட்டிருக்கிறான். இது பற்றி குற்றம் சரியாக நிரூபிக்கப்படவில்லை.

ஆனால் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக வக்ர எண்ணம் பிடித்த அந்த நபருக்கு இரண்டு ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு நேர்ந்த அவமானங்களை வெளியே சொல்லும் போது முகத்தை மறைத்துக்கொண்டு, பேசி வந்த சாரா ஒரு கட்டத்தில் தனது முகத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.

தனக்கு நேர்ந்த கொடுமைகளை தைரியமாக எதிர்கொள்ள இது துணைபுரிவதாகவும் கூறியுள்ளார். தன்னைப்போல பலரும் வெளிப்படுத்துக்கொண்டு கொடுமைப்படுத்துபவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று கூறியுள்ளார்.

அவமானங்களை புன்னகையுடன் எதிர்கொண்டால் மட்டுமே எதிராளிகளை நாம் விரட்ட முடியும். வெட்கப்பட்டுக்கொண்டு ஓடி ஒளிந்தால் நம்மை அவமானப்படுத்துபவர்கள் அழவைத்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்கிறார் சாரா. அவரைப்போல பாதிக்கப்பட்ட பலரும் இந்த ஷேம்லெஸ் சர்க்கிளில் இணைந்துள்ளனர்.

3423 total views